திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் இன்று பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் இன்று பிரச்சாரம்
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் அஇஅதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறஉள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அஇஅதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

5-ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி இன்று (பிப். 7) திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதன்படி, முதல்வர் தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டு, மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட போரூரில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், காலை 10.30 மணிக்கு அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே நடைபெறும் மகளிர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

காலை 11.50 மணிக்கு ஆவடி அடுத்த காடுவெட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். பிற்பகல் 3.50மணிக்கு திருவள்ளூரில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

மாலை 6 மணிக்கு மாதவரம் அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் மகளிருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு மீஞ்சூர் கடை வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பிரச்சார பயணத்துக்கான ஏற்பாடுகளை அஇஅதிமுக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின், தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர், மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் செய்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in