கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி தொடக்கம்

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது.
Updated on
1 min read

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது. கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி.கே.முத்துசாமி தலைமை வகித்தார்.

செயலாளர் பி.சி.பழனிசாமி வரவேற்று பேசுகையில், எல்லா கல்வி ஆண்டிலும் பல்கலைக் கழகத்தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மதிப்பெண் பெறும் 5 சதவீதம் மாணவர் களுக்கு அறக்கட்டளை சார்பில் ஊக்கத்தொகையாக கல்வி கட்டணத்தின் ஒரு பகுதி வழங்கப்படும், என்றார்.

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தின் மகத்துவத்தை பாராட்டிப் பேசினார்.

பூனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நேச்சுரோபதி முன்னாள் இயக்குநர் மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளம் நேதாஜி யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் பாபு ஜோசப் சிறப்புரையாற்றினார். விழாவில் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு அம்சங்களாக அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், 100 படுக்கை வசதி கொண்ட உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, இயற்கை உணவு சிகிச்சை, நடைபயிற்சி பாதை, நீர் நடைபாதை, 8 வடிவ நடை பாதை, தியான அறை ஆகியவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

மேலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை, பக்கவாதம், அலர்ஜி, சைனஸ், ஆஸ்துமா, குடல் புண், மன அழுத்தம், தூக்கமின்மை,ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, சிறுநீரகக்கல், தைராய்டு கோளாறுகள், உடல் பருமன் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவமனையில் சிறந்த முறையில் இயற்கை வழியில் மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

அறக்கட்டளையின் பொரு ளாளர் இ.ஆர்.கார்த்திகேயன், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆர்.குமாரசாமி மற்றும் ஏ.கே.இளங்கோ, துணை செயலாளர் ஆர்.ஆர்.சத்திய மூர்த்தி, முதல்வர் மருத்துவர் பிரதாப்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in