விவசாயிகள் சங்கத்தினர் கைதட்டும் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் கைதட்டும் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மாலை அணிவித்தனர்.

பின்னர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கை தட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார். காவிரி பாதுகாப்பு இயக்கத் தலைவர் சுந்தர விமலநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

புதிய வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in