அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது டி.டி.வி.தினகரன் கருத்து

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது டி.டி.வி.தினகரன் கருத்து
Updated on
1 min read

``அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், பண்பொழியில் உள்ள திருமலைக்குமார சுவாமி கோயிலில் தினகரன் நேற்று சுவாமி தரிசனம்செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலா நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவார். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சசிகலா முடிவு செய்வார். சசிகலாவின் வருகையை அமமுக தொண்டர்கள், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள், தமிழகமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அவர் வந்தவுடன் தமிழகத்தில் பெரிய மாற்றம் உருவாகும். அனைத்துக்கும் நல்ல விதமான முடிவு வரும்.

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் வேண்டுமானால் நீதிமன்ற கதவுகளை தட்டட்டும்.

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம். அதிமுகவை ஜனநாயக வழியில் மீட்டெடுப் பதற்கான ஆயுதம்தான் அமமுக. அந்த பணியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.

விடியலை நோக்கி என்ற பெயரில் ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்வது திமுகவுக்கு விடியலைத் தராது.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in