

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 4-வது நாளாக நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பணி பார்க்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்படபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 108 பெண்கள் உட்பட 172 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் போலீஸார் தங்கவைத்தனர்.
கோவை
உதகை