புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா  கொடியேற்றம்
Updated on
1 min read

மதுரை புதூர் புனித லூர்து அன்னை ஆலய 101-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக வரும் 13-ம் தேதி சிறப்புத் தேர்பவனி நடைபெறுகிறது.

மதுரை புதூர் புனித லூர்து அன்னை ஆலய 101-வது ஆண்டு திருவிழாவை நேற்று மாலை சலேசிய திருச்சபையின் மாநிலத் தலைவர் பங்குத் தந்தை அகிலன் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மன்றா ட்டும் பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் சிறப்புத் திருப்பலியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 13-ம் தேதி மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமஸ் தலைமையில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் விழாவும், மாலை 6 மணிக்கு பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா சிறப்புத் திருப்பலியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட லூர்தன்னை தேர் பவனி நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in