

ராமநாதபுரம் அருகே சிறுமியைக் கடத்திச்சென்ற இளைஞரை போக்ஸோ பிரிவில் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த இமானுவேல் (20) என்பவர் கடத்திச் சென்றதாக உச்சிப்புளி போலீஸில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி இளைஞரையும், அச்சிறுமியையும் நேற்று மீட்டனர். மேலும் இளைஞர் இமானுவேல் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.