காணாமல் போன குழந்தைகளை மீட்க ‘புன்னகையைத் தேடி’ ஆய்வுக் குழு வாகனம்

காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்கான  ஆய்வுக்குழு வாகனத்தை தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.
காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்கான ஆய்வுக்குழு வாகனத்தை தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

காணாமல்போன குழந்தைகளை மீட்பது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை எடுப்பது தொடர்பான ‘புன்னகையைத் தேடி' எனும் ஆய்வுக்குழு சிறப்பு வாகன பயன்பாடு, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டறிந்துபெற்றோர் அல்லது பாதுகாவலர் வசம் ஒப்படைப்பது, தேவைப்படின் குழந்தைகள் இல்லங்களில் பராமரிப்பது தொடர்பாக ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் நடைபாதை, சாலைகள், பேருந்து நிலையம், சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டபல்வேறு இடங்களில் தங்கியுள்ள குழந்தைகளை கண்டறிந்து, மீட்டு பெற்றோர் அல்லது பாதுகாவலர் வசம்ஒப்படைப்பர். மேலும் தேவையான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in