

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் புனித அந்தோணியார் கெபி அமைந்துள்ளது. இந்த கெபியின்40-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது.
புனித அந்தோணியாரின் திருக்கொடியானது புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை விசந்தி சகாய உபர்ட்டஸ் தலைமையில் மந்திரிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் மாலை 7 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை மன்றாட்டு நடைபெறும்.
திருவிழா சிறப்பு நிகழ்வுகளாக 15.2.2021 அன்று மாலையில் புனிதஅந்தோணியார் திருவுருவ சப்பரபவனி நடைபெறும். புனித அந்தோணியார் பெருவிழா தினமான 16-2-2021 அன்று மதியம் அசனவிருந்து நடைபெறும்.
தொடர்ந்து மாலை ஆண்டுப் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பூபால்ராயபுரம் புனித அந்தோணியார் கெபி கமிட்டியினர் செய்து வருகின்ற னர்.