விவசாயிகள் கடன் தள்ளுபடி அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விவசாய கடனை தள்ளுபடி செய்ததை வரவேற்று தி.மலை மாவட்டம் செய்யாறில் நேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர். அடுத்த படம்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்துநிலையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ததை வரவேற்று தி.மலை மாவட்டம் செய்யாறில் நேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர். அடுத்த படம்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்துநிலையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Updated on
1 min read

விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்று, தி.மலை மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் நேற்று கொண்டாடினர்.

வறட்சி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டது. மேலும், கரோனா காலத்தில் விவசாய பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு மற்றும் அறுவடை செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். இதற்கிடையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதையடுத்து, முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தி.மலை மாவட்டத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். செய்யாறு, திருவண்ணாமலை, ஆரணி உட்பட மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மற்றும் பட்டாசு வெடித்தும், விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்த முதல்வர் பழனிசாமியை பாராட்டி முழக்கமிட்டனர்.

வாணியம்பாடி

இதில், ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில் குமார், நகரச்செயலாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in