பணி நிரந்தரம் செய்யும்போது அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, காட்பாடியில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் அளித்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, காட்பாடியில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் அளித்தனர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

பணி நிரந்தரம் செய்யும்போது அரசு கல்லூரி கவுரவ விரிவுரை யாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மண்டல இணை இயக்குநரிடம் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில்நேற்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், ‘‘தமிழகத்தில் 42 அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி களை கடந்த 2019-2020-ம் ஆண்டில் அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. அக்கல்லூரிகளில் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்கள் பணி மூப்பு சிறப்புத் தேர்வில் பங்கேற்க அரசு அனுமதித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் கவுரவ விரிவு ரையாளர்கள் பாதிக்கப்படு வார்கள்.

ஆகவே, பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி கவுரவ விரிவுரை யாளர்களை சிறப்புத்தேர்வில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். பணி அனுபவம் வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்வதில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரை யாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி யுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in