

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே உள்ள நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரம்பி உள்ளது. நீர் இருப்பு 254.381 மில்லியன் கன அடி உள்ளது. இதையடுத்து பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆகியோர் பாசனத்துக்கு நீரை திறந்துவிட்டனர். மார்ச் 15-ம் தேதி வரை 40 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 6,250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.