பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதிகளில் நேரிட்ட இருவேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்

பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதிகளில் நேரிட்ட இருவேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்
Updated on
1 min read

பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதிகளில் நேரிட்ட இருவேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிதம்பரம் மகன் மணிகண்டன்(22), மருது மகன்கள் மணிகண்டன்(28), சக்திவேல்(20). இவர்கள் 3 பேரும் பட்டுக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு, நேற்று மாலை ஒரே இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டி ருந்தனர்.

கோட்டாகுடி அய்யனார் கோயில் அருகே சென்றபோது, சாலை திருப்பத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில், சி.மணிகண்டன், ம.மணிகண்டன் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சக்திவேல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே ராஜ கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(24). இவர், தனது உறவினர் பன்னீர்செல்வம்(48) என்பவருடன், இருசக்கர வாக னத்தில் தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

மன்னார்குடி அருகே காரக்கோட்டையை அடுத்துள்ள ராணித் தோப்பு எனும் இடத்தில் சென்றபோது, எதிரே தஞ்சையிலிருந்து மன்னார்குடி நோக்கி வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பன்னீர்செல்வம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வடுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in