

அம்பாசமுத்திரம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
`அம்பாசமுத்திரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அறிவித்த 388 ரூபாய் தினசரி ஊதியம் வழங்க வேண்டும். இபிஎப் பிடித்தம் செய்த பணத்தை முழுமையாக இபிஎப் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு விடுப்பு முறையாக வழங்க வேண்டும். சீருடை வழங்க வேண்டும். மாத ஊதியத்தை 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நகர்ப்பகுதியில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் பார்கவி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு, 5 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.