தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.60 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த  ரூ.60 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்
Updated on
1 min read

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 'சாரஸ்' போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக மதுரையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மதுரையில் இருந்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி வந்து, ஜார்ஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சுமார் 9 கிலோ சாரஸ் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 பேரை அதிகாரிகள் பிடித்து, விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து சென்றனர். போதைப் பொருளை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்து இருந்தார்களா என்று கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in