

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலை கணபதி நகரில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நூற்பாலையின் ஒரு பகுதியில் தனி குடோனில் நூல் பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த குடோனுக்குள் இருந்து கரும்புகைவெளிவந்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்புத்துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து பல்லடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதேபோல மங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட சாமளாபுரத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஆலை கட்டிடம்உள்ளது. அந்த கட்டிடத்தை முகமது ஆசிக்என்பவர் வாடகைக்கு எடுத்து பின்னலாடை வேஸ்ட் துணிகளை அரைத்து, பஞ்சாகமாற்றும் தொழில் செய்து வந்தார். பணிநடைபெற்றுக் கொண்டிருந்தபோதுஇயந்திரங்களுக்குள் உராய்வு ஏற்பட்டு,ஆலைக்குள் தீப்பிடித்தது. தகவலறிந்து சென்ற பல்லடம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.