திண்டுக்கல்லில் அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு

திண்டுக்கல்லில் அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு
Updated on
1 min read

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் மருதராஜ் தலைமையில் அக்கட்சியினர் திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நத்தம் நகர அதிமுக சார்பில் பேருந்துநிலையம் அருகே அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக நகரச் செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in