பெண் கொலை இரு இளைஞர்கள் குண்டாஸில் கைது

பெண் கொலை இரு இளைஞர்கள்  குண்டாஸில் கைது
Updated on
1 min read

வடமதுரை இளம்பெண் கொலை யில் தொடர்புடைய இரு இளை ஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடம துரையைச் சேர்ந்தவர் ஜெய (22). இவரை பழநி அருகே கோம்பைப்பட்டியைச் சேர்ந்த வடிவேலு மகன் தங்கதுரை (27), பாலசுப்பிரமணி மகன் ஜெகநாதன்(27) ஆகியோர் காதல் பிரச்சினையில் கொலை செய்தனர். கள்ளிமந்தயம் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத் தில் கைது செய்ய திண்டு க்கல் எஸ்.பி., ரவளிபிரியா, திண்டுக்கல் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் தங்கத்துரை, ஜெகநாதன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார். ஏற்கெனவே கைதாகி இருந்த இருவரையும் மதுரை மத்திய சிறையில் போலீஸார் அடைத் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in