விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published on

விருதுநகரில் பிப்.5-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சி யர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்.5-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 6 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. ஆகிய கல்வித் தகுதி உடையவர்களைத் தேர்வு செய்ய உள்ளார்கள். பிட்டர் மற்றும் வெல்டர் முடித்தவர்கள் சிவகாசியில் உள்ள முன்னனி நிறுவனத்தில் பணிபுரிய அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். மேலும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக 30 முதல் 45 வயதுள்ளவர்களையும் தேர்வு செய்ய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in