டெல்லி விவசாயிகளின் போராட்டம் புதிய இந்தியாவை உருவாக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் கருத்து

டெல்லி விவசாயிகளின் போராட்டம் புதிய இந்தியாவை உருவாக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் கருத்து
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், கரோனா பட்ஜெட் போன்று உள்ளது. கரோனாவை காரணமாக கூறி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நீண்டகால கோரிக் கையான கடன் தள்ளுபடி தொடர் பாக அறிவிப்பு ஏதும் இல்லா ததால், விவசாயிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களை கருத்தில் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க இதில் சிறப்பு திட்டங்கள் ஏதும் இல்லை. சுயசார்பு பட்ஜெட் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

டெல்லியில் போராடும் விவ சாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு செவி கொடுத்து கேட்க மறுக்கிறது. போராட்டக் களத்தில் நான் 15 நாட்கள் அவர்களுடன் தங்கி இருந்தேன். அவர்கள் உணர்வுப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியை சிலர் சதித் திட்டம் தீட்டி, செங்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடைபெறும்.

டெல்லியில் நடைபெறும் போராட்டம் புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள் ளனர். நானும் ஒரு விவசாயி எனக் கூறும் முதல்வர் பழனிசாமி இதற்காக வெட்கப்பட வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றார்.

கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, மாவட்டப் பொறுப்பாளர் என்.பாலசுப்பி ரணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீரமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in