

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைக்கஅடிக்கல்நாட்டு விழா நடை பெற்றது.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகு மாறன் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை அமைக்க ரூ. 5 லட்சம் நிதிஒதுக்கீடு செய்தார்.
அவர் தலைமையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், ராமச்சந்திரன், காட்டுமன்னார்கோவில் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வாசுமுருகையன், நிர்வாகிகள் கிருபாசங்கர், ஒன்றிய தகவல் தொழிற் நுட்பபிரிவு இணை செயலாளர் கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.