போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் 1,000 பேர் மீது வழக்கு பதிவு

போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்  1,000 பேர் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

திருவாரூரில் நேற்று முன்தினம் போலீஸாரை கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் ஜன.26-ம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது காவல் துறை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன், இதுவரை 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரி வித்து நேற்று முன்தினம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக திருவாரூர் நகரச் செயலாளர் வாரை.பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் புலிவலம் தேவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வடிவழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் புலிகேசி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பழனிவேல், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 1,000 பேர் மீது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருவாரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in