கோவை- நாகர்கோவில் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவை- நாகர்கோவில் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
Updated on
1 min read

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருமங்கலம் - துலுக்கப்பட்டி, கோவில்பட்டி - கடம்பூர், கங்கைகொண்டான் - திருநெல்வேலி இரட்டைப் பாதை பணிகள் இணைப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மதுரை, திருமங்கலம், விருதுநகர் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் வண்டி எண் 06322 கோவை - நாகர்கோவில் பகல் நேர விரைவு சிறப்பு ரயில் பிப்ரவரி 2, 3, 6, 10, 11, 12, 13, 20, 22, 25, 26, 27, மார்ச் 1, 2, 4, 5, 6, 8, ஆகிய நாட்களில் மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் 55 நிமிடங்கள் காலதாமதமாக திருநெல்வேலி சென்று சேரும். மாற்றுப்பாதையில் ரயில்வே நிர்வாக காரணங்களுக்காக மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in