வேலூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் 13 வட்டாட் சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பணி யாற்றும் 13 வட்டாட்சியர் களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அணைக்கட்டு தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் எஸ்.விஜய குமார், தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டு நீதி பரிபாலனை பயிற்சிக்கு இடையூறு இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணியாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளார். அங்கு, ஏற்கெனவே பணியாற்றி வந்த எஸ்.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட் டுள்ளார்.

மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் பூமா, தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி வட்டாட்சியராகவும், அங்கு ஏற்கெ னவே பணியாற்றி வந்த எஸ்.பாலாஜி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) ஆகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜெகதீஷ் வரன், வேலூர் கோட்ட கலால் அலுவலராகவும், அந்தப் பதவியில் இருந்த ஆர்.குமார், பேரணாம் பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த எம்.பழனி, அணைக்கட்டு வட்டாட்சியராக வும், ஏற்கெனவே அணைக்கட்டு பொறுப்பு வட்டாட்சியராக இருந்த சரவணமுத்து, பெங்களூரு-சென்னை விரைவுப் பாதை திட்ட நில எடுப்பு தனி வட்டாட்சியராக நியமிக்கப் பட்டுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி வட்டாட்சியர் விநாயகமூர்த்தி, கே.வி.குப்பம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராகவும், அந்தப் பதவியில் இருந்த ஹெலன்ராணி, வேலூர் மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை-பெங்களூரு விரைவுப்பாதை நில எடுப்பு தனி வட்டாட்சியர் லலிதா, மாவட்ட அகதிகள் பிரிவு தனி வட்டாட்சியராகவும், வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி வட்டாட்சியர் கலைவாணி, வேலூர் கலால் மேற்பார்வை யாளராகவும், அந்தப் பணியில் இருந்த உஷாராணி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in