காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது  லாரி மோதியதில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனம் மீது, அதிவேகமாக வந்த லாரி மோதியதில் தம்பதி உட்பட3 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் டி.முத்துராஜா(26). பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருபா(24). இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிக்கு, குழந்தைகள் இல்லை.இந்நிலையில், கிருபாவின் சகோதரி வீட்டில் நடைபெறவிருந்த காதணி விழாவில் பங்கேற்பதற்காக முத்துராஜா, கிருபா மற்றும் கிருபாவின் சித்தி மகள் சுகப்பிரியா(17) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவுஇருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.திருப்பூர்-கரூர் சாலையில், பகவதி பாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிரில் அதிவேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனம்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜா, கிருபா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்குபோராடிக் கொண்டிருந்த சுகப்பிரியாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து காங்கயம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in