கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு இன்று ஸ்டாலின் வருகை

கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு இன்று ஸ்டாலின் வருகை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இன்று (1-ம் தேதி) திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் திமுக சார்பில் சட்டப் பேரவை தொகுதிகளில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சிகளில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசுவதுடன், பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்று வருகிறார்.

இன்று (1-ம் தேதி) காலை கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் கே.பூசாரிப்பட்டி கூட்டு ரோடு பகுதியில் காலை 8 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுவதுடன், பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். பகல் 1 மணிக்கு தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதி மேம்பாலம் அருகே நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்.

இத்தகவலை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in