திண்டுக்கல் அருகே கசனவம்பட்டியில் திமுகவினர் நடத்திய கிரிக்கெட் போட்டி

கசவனம்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கசவனம்பட்டி அணிக்கு பரிசுவழங்கிய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.
கசவனம்பட்டியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கசவனம்பட்டி அணிக்கு பரிசுவழங்கிய திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட கசவனம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் கன்னிவாடி, தருமத்துப்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. நான்கு நாட்கள் சுழற்சி முறையில் நடந்த போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, எம்.எல்.ஏ., கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முதலிடம் பிடித்த கசவனம்பட்டி அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை. இரண்டாம் இடம் பெற்ற குய்யவநாயக்கன்பட்டி கிராம அணிக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற ஆத்துமரத்துப்பட்டி கிராம அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவகுருசாமி, ஊராட்சித்தலைவர் சக்திமுருகவேல் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in