அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாக தமிழகத்தில் 60 லட்சம் குடும்பங்களை சந்திக்க திட்டம் வி.எச்.பி பொதுச் செயலாளர் மிலிந்த் பரான்டே தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம்  தொடர்பாக தமிழகத்தில் 60 லட்சம் குடும்பங்களை சந்திக்க திட்டம் வி.எச்.பி பொதுச் செயலாளர் மிலிந்த் பரான்டே தகவல்
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாக தமிழ கத்தில் 60 லட்சம் குடும்பங்களை சந்திக்க உள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் மிலிந்த் பரான்டே தெரிவித்தார்.

கரூரில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:  ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் ஜன.15-ம் தேதி தொடங்கிய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்.27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களுக்கு சென்று 13 கோடி குடும்பங்களை சந்தித்து ராமர் கோயில் மறுகட்டுமானம் குறித்து விளக்கி, கோயில் கட்டுமான நிதி சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், தமிழகத்தில் சேவா பாரதி, சின்மயா மிஷன், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று 60 லட்சம் குடும்பங்களை சந்திக்க உள்ளோம். மூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். அப்போது, அமைப்பின் கரூர் மாவட்ட நிர்வாகி சேதுராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிதி சேகரிப்பு தொடக்க விழா

இதேபோல, காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிதி திரட்டும் பணி நிகழ்வில்,  நித்யகல்யாண பெருமாள் பக்தஜன சபா தலைவர் உ.வே.கு.அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள் நிதியளித்து, பணியை தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in