போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கேற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் காயம்

கரூர் மாவட்டம் கொசூரில் நேற்று முன்தினம் இரவு  நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின்போது இடிந்து விழுந்த  சாய்வு தள கைப்பிடிச் சுவர்.
கரூர் மாவட்டம் கொசூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின்போது இடிந்து விழுந்த சாய்வு தள கைப்பிடிச் சுவர்.
Updated on
1 min read

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் கொசூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று மினி கிளினிக்கை திறந்துவைத்தார். அப்போது, அதன் முன்பக்கத்தில் இருந்த சாய்வு தளத்தின் கைப்பிடிச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் சுசிதா(7), பழனிவேல் மகள் சிந்துஜா(8) ஆகியோர் காயமடைந்தனர்.

இதைக்கண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்த சிறுமிகள் இரு வரையும் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தார். மேலும், அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

இடிந்தது எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in