

திருப்பூர் மாநகர் முழுவதும் குப்பை, சாக்கடைக் கழிவுகள் அகற்றாத நிலை, முறையற்ற குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மாநகர மக்கள் ஆளாகி உள்ளனர். மாநகராட்சியின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தரமற்ற முறையில் நடைபெற்றுவரும் பணிகளை சீர் செய்ய வேண்டியும், மாநகராட்சியின் ஊழல் முறைகேட்டை கண்டித்தும் வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.