

விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசிப்பவர் ரவி (50). இவர் முன்னாள் பாமக நகர துணை செயலாளராக பதவி வகித்தவர். இவர் தன் மனைவி அமுதா (42), மகன்கள் பரத் (23), கிஷோர் (20) ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று நண்பகல் வீட்டில் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று கட்டி விட்டு, சித்தேரிக்கரை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் ரவியின் கழுத்து, தொண்டை, விலாவில் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியில் ரவி உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்த எஸ்.பி ராதா கிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம் உள் ளிட்ட போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் ராக்கி சம்பவ இடத்திலிருந்து சென்னை புறவழிச்சாலை வரை ஓடி நின்றது. இது குறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சித்தேரிக்கரை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் கத்தியால் குத்தினார்.