

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த மாமந்தூர் கிரா மத்திற்கும், கடலூர் மாவட்டம் பனையந்தூர் கிராமத்துக்கு இடையே யான தார் சாலை கடந்த வாரம்வரை பெய்த மழையால் சேதம டைந்து குண்டும் குழியுமாக மாறி யது. பழுதடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது. இத னால் சாலையைப் பயன்படுத்த முடியாமல் இரு கிராம மக்களும் நெடுஞ்சாலைத்துறையில் புகார் அளித்தனர். இருப்பினும் சாலை சீரமைக்கப்படவில்லை.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று போக்குவரத்தை மறித்து, சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சின்னசேலம் போலீஸார் அவரிகளிடம் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர்.