விருதுநகரில் இணைய வழியாக 1,493 பேர் உறுதிமொழி ஏற்பு சாதனை நிகழ்ச்சி

விருதுநகரில் இணைய வழியாக நடைபெற்ற "தூய்மை இந்தியா" உறுதிமொழி ஏற்பு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
விருதுநகரில் இணைய வழியாக நடைபெற்ற "தூய்மை இந்தியா" உறுதிமொழி ஏற்பு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

விருதுநகரில் இணைய வழியாக 1,493 பேர் "தூய்மை இந்தியா" உறுதிமொழி ஏற்ற சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகரில் "நமது ஊர் நமது கடமை" என்ற அமைப்பின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து "தூய்மை இந்தியா" உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 1,493 பேர் இணைய வழியாக பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். இம்முயற்சி இந்திய புக் ஆப் ரெக்கார்டில் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. குப்பை வங்கி, இதயம் நிறுவனம், ரோட்டரி கிளப்-ஆப் விருதுநகர், ஜேசிஐ விருதுநகர் போக்கஸ் போன்றவை இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தன. இந்நிகழ்ச்சியை "நமது ஊர், நமது கடமை" இயக்கத்தின் நிர்வாகிகள் ஷ்யாம், ராஜ், சுந்தர், ராஜவள்ளி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in