Regional02
துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தனர். தாளமுத்துநகரில், சந்தேகத்துக்கு இடமாகநின்ற, பழையகாயல், புல்லாவழியைச் சேர்ந்த ஜெயராஜ்(50) என்பவரை விசாரித்தனர். அவரிடம்உரிமம் இன்றி ஏர் கைத்துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்களும் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன. ஜெயராஜ் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கைது செய்யப்பட்டார்.
