பாமக ஆர்ப்பாட்டம்

பாமக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் - பல்லடம் சாலையிலுள்ள தமிழ்நாடு திரையரங்கப் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு, ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தியிடம் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in