

கரோனா கால சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முறையாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முன்பு செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக மாநில துணைத் தலைவர் சுதா கூறும் போது, ‘செவிலியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால், அந்த தொகை இன்னும் வழங்கவில்லை,’ என்றார்.
ஈரோடு
கிருஷ்ணகிரி
மாநில செயற்குழு உறுப்பினர் பத்மினி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சீதா, செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.