

கரூர், பெரம்பலூர், அரியலூரில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத் தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க, அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அருள், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, தேர்தல் வட்டாட்சியர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில்...
மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பு.மு.லோகேஷ்வரி, வேளாண்துறை இணை இயக்குநர் ச.கருணாநிதி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சி.கிறிஸ்டி, பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆர்.ரமண கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூரில்...
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.