கட்டுரைப் போட்டியில் குமரி மாணவிக்கு தங்கப்பதக்கம்

கட்டுரைப் போட்டியில் குமரி மாணவிக்கு தங்கப்பதக்கம்

Published on

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய ஆய்வு கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி முனைவர் பட்ட ஆய்வு மாணவி பெ. சீதேவிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. திருநெல்வேலியில் வரும் 13-ம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் பெருவிழாவில் அவருக்கு பதக்கமும், அவர் பயிலும் கல்லூரிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் த.பி. சொக்கலால் நினைவு வெள்ளி சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.

போட்டியில் 2-ம் இடத்தை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் இரா. குமரகுருபரனும், 3-வது இடத்தை மதுரை தியாகராஜர் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வு மாணவி பி. மேனகாவும் பெற்றுள்ளனர். இத்தகவலை தனித்தமிழ் இலக்கிய கழக தலைவர் பா. வளன்அரசு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in