மேட்டூர் அணையில் நீர்திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் நீர்திறப்பு நிறுத்தம்
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்தாண்டு ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. கடந்த 7 மாதமாக டெல்டா பாசனத் தேவைக்கு ஏற்ப அதிகமாகவும் குறைவாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்துக்கு கடந்த 7 மாதங்களில் 164 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று நீர்வரத்து விநாடிக்கு 1,069 கனஅடியாகவும், நீர்மட்டம் 105.96 அடியாகவும், நீர் இருப்பு 72.78 டிஎம்சி-யாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in