மோசடி நடைபெற்றது எப்படி ?

மோசடி நடைபெற்றது எப்படி ?
Updated on
1 min read

மாநகர, மத்திய குற்றப் பிரிவினர் கூறும்போது, "கைது செய்யப்பட்ட சங்கர், 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர். கையாடல் செய்த பணத்தில், தனது பெற்றோர் பெயரில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் அசையா சொத்து வாங்கியுள்ளார். அந்த பத்திரப் பதிவுக்கான கட்டணம் ரூ.39,300, மற்றொரு நபர் பத்திரப் பதிவு செய்ய அரசுக்கு செலுத்திய கட்டணம் ஆகியவற்றை சட்ட விரோதமாக ரத்து செய்து, அந்த பணத்தின் மூலமாக தன் பெற்றோர் பெயரில் பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் முறையாக செலுத்திய தொகைகளுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்தும், அதே தொகையை சார் பதிவாளர் அலுவலக அலுவலர்கள் மூலமாக ரத்து செய்தும், குறிப்பிட்ட 15 இலக்க REG குறியீட்டு எண்ணை அடுத்தவரின் பத்திரப் பதிவுக்கு பயன்படுத்தியும், பதிவு செய்து கொடுத்துள்ளார் ஜெய்சங்கர். இதில் 2-ம் நபர் பத்திரப் பதிவுக்கு அரசுக்கு செலுத்தும் பணத்தை ரொக்கமாக பெற்று, அதை பத்திரப் பதிவு அலுவலக அலுவலர்கள், கணினி அலுவலர்களுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in