உசிலம்பட்டி  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் ச

உசிலம்பட்டி
   மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் ச
Updated on
1 min read

உசிலம்பட்டி

 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் ச.அழகுமணிமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாலாந்தூர் உபமின் நிலையத்தில் நாளை (ஜன.30) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. இதனால் அய்யனார்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய ஊர்களில் மின் விநியோகம் தடைப்படும்.

சின்னமனூர்

 தேனி மாவட்டம், சின்னமனூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் பெ.ரமேசுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டம் உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.30) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சார விநியோகம் இருக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in