

போச்சம்பள்ளி அருகே ஜோதிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நடுபழனி ஆண்டவர், புவனேஸ்வரி அம்மன், ஜோதிலிங்கேஸ்வரர், விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை கணபதி பூஜை, புண்ணியாகவாஸம், 108 மூலிகை திரிவயாகுதி, பூர்ணாகுதி உபச்சாரம், திருமுறை விண்ணப்பம், வாழ்த்து மஹா தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து கருமலை நடுபழனி ஆண்டவர், புவனேஸ்வரி அம்பாள் சமேத ஜோதிலிங்கேஸ்வரர் சகித பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. முன்னதாக கிராம மக்கள் சீர் வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.
பூமி பூஜை