‘தி.மலை மாவட்டத்தில் ஆற்றுப்படுத்துநர் காலி பணியிடம்’

‘தி.மலை மாவட்டத்தில் ஆற்றுப்படுத்துநர் காலி பணியிடம்’

Published on

தி.மலை மாவட்டத்தில் ஆற்றுப் படுத்துநர் காலிப் பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தி.மலை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல் படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் 3 காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உள வியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய கல்வியில் முதுநிலை பட்டம் பெற்ற நபர்களில் விண்ணப்பங்கள் உரிய சான்றின் நகல்களுடன் வரும் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் கண்காணிப்பாளர், அரசு குழந் தைகள் காப்பகம், சிங்க தீர்த்தம் எதிரே, செங்கம் சாலை, அரசு கலை கல்லூரி அருகில், தி.மலை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1,000 வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு கண்காணிப் பாளரின் 9080018048 என்ற செல் போன் எண்ணில் தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in