

வேலூர்: வேலூர் மாவட்டம் கந்தநேரி கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்த குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை சந்திக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நாளை (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் தி.மு.க தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே (தேசிய நெடுஞ்சாலை) கந்தநேரி கிராமத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற முழக்கத்துடன் பொதுமக்களை சந்தித்து பொதுமக்களுடன் உரையாடவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி திமுக தலைவரிடம் வழங்கிடும்பட்சத்தில் அதன் மீதான நடவடிக்கையை திமுக தலைவர் தலைமையில் அமையவுள்ள ஆட்சியின் வாயிலாக 100 நாட்களுக்குள் தீர்வு காண்பேன் என உறுதியளித்துள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.