கரோனா ஊரடங்கு தளர்வால் 10 மாதங்களுக்குப் பிறகு உதகை தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பு

கரோனா ஊரடங்கு தளர்வால் 10 மாதங்களுக்குப் பிறகு உதகை தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பு
Updated on
1 min read

உதகையில் 10 மாதங்களுக்குப் பின்னர் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் கவுதம் கார்த்திக் பங்கேற்ற படப்பிடிப்பை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

இயற்கை எழில் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படப்பிடிப்புகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகளவில் நடந்துவந்தது. பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, உதகையில் சினிமா படப்பிடிப்பு வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாககடந்த 10 மாதங்களாக உதகையில் படப்பிடிப்புகள் நடைபெற வில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகள் நடைபெற தொடங்கியுள்ளன.

நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு உதகை தாவரவியல் பூங்காவில் கடந்த வாரம் நடந்தது. இயக்குநர் எழில்இந்த படத்தை இயக்குகிறார்.சாய் பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் எழில் கூறும் போது, ‘‘ராஜேஸ்குமாரின் ‘யுத்த சப்தம்’ என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. குன்னூர், உதகையில் படப்பிடிப்பு நடக்கிறது’’ என்றார். ஏராளமான பொதுமக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in