செங்கை ‘கலெக்டர்’ பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

செங்கை   ‘கலெக்டர்’  பிள்ளையார்  கோயில் கும்பாபிஷேகம்
Updated on
1 min read

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயில், ‘கலெக்டர் பிள்ளையார்’ கோயில் என மக்களால் போற்றப்பட்டு வருகிறது.

பல சிறப்புகள் வாய்ந்த இந்தக் கோயிலுக்கு கடந்த 27.01.2002-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் புதுப்பிக்கப்பட்டு புதிதாக அன்னதானக் கூடமும் கட்டப்பட்டு, முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற அதேநாளில் நாளை(ஜன.27) காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள்ளாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மா.ஜெயா, நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in