

முன்னதாக காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியருக்கு கரோனா தொற்று பாதுகாப்பு பொருட்களை, ‘மொபிஸ் இந்தியா’ சார்பில் நேற்று காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், ’மொபிஸ் இந்தியா’ நிறுவன மனிதவள இயக்குநர் பிரேம் சாய், பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.