காவேரிப்பட்டணம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

காவேரிப்பட்டணம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
Updated on
1 min read

காவேரிப்பட்டணம் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள  பிரசன்ன பார்வதி சமேத நகரேஸ்வர சுவாமி  கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணமும், காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், காலை 8.30 மணிக்கு தம்பதி சங்கல்பம், திரவியாஹீதியும், காலை 9.15 மணிக்கு பிரயாச்சித்த ஹோமம், சாந்தி ஹோமம், மகா பூர்ணாஹீதி, தசதானம், யாத்திரா தானம் ஆகியவை நடந்தது.

தொடர்ந்து 9.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் மூலவர், பார்வதி அம்மன், கன்னி காபரமேஸ்வரி அம்மன் சந்நதி விமானத்துக்கு மகா கும்பாபி ஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு  பிரசன்ன பார்வதி சமேத  நகரேஸ்வர சுவாமி,  கன்னிகா பரமேஸ்வரி மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், விஷேச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுரம் மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in