உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் உதவி

ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் சார்பில் உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு உதவி செய்யும் விதமாக, லாரி உரிமையாளர்களுக்கான சேவை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் சார்பில் உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு உதவி செய்யும் விதமாக, லாரி உரிமையாளர்களுக்கான சேவை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
Updated on
1 min read

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பொட்டனேரியில் இயங்கும் ஜே.எஸ்.டபிள்யூ. இரும்பு உருக்கு ஆலையில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான தனியார் லாரிகள் மூலம் மூலப் பொருட்களை எடுத்து வரவும், உற்பத்தியான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப் படுகிறது. இதற்கு மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.

இதனையடுத்து, ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் சார்பில் உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு உதவி செய்யும் விதமாக, லாரி உரிமையாளர்களுக்கான சேவை அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த அலுவலகத்தை ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் முதன்மை அலுவலர் பிரகாஷ் ராவ், பிரிகேடியர் சஞ்சய் தாகூர் முன்னிலையில் திறந்து வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை அழகேசன் மற்றும் ரமேஷ் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in