சிவன் கோயில்களில் கும்பாபிஷேக விழா

சிவன் கோயில்களில் கும்பாபிஷேக விழா
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே முப்பைத்தங் குடியில் பிரசித்திபெற்ற காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இந்தக் கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், அரசு நிதி மற்றும் நன்கொடை மூலம் ரூ.1 கோடி மதிப்பில் கைலாசநாதர், காமாட்சி அம்பாள், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், லட்சுமி நாராயணர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, நந்திகேஸ்வரா், பைரவர் உள்ளிட்ட பரிவார சன்னதிகளுடன், திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

இதையடுத்து, நேற்று காலை 9.50 மணியளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், வேளாக் குறிச்சி ஆதீனம் ல சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் தனி அதிகாரி ஜெ.கருணாநிதி மற்றும் திருப்பணிக் குழுவினர், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கண்டீஸ்வரத்தில் உள்ள பழமை வாய்ந்த சாந்தநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, நேற்று காலை 9 மணி அளவில் புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் அம்பாள், மூலவர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதி விமானங் களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் செயல்அலுவலர் ஆறுமுகம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெருமாள் கோயிலில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in